Bro.D.Augastine Jebakumar Kavithaigal Part - 3
கொல்லனின் சுத்தியல் சத்தம் கேட்கிறதா?
பொல்லாதவனின் சூழ்ச்சிகள் புரிகிறதா?
திரைமறைவிலே எதிரியின் கொக்கரிப்பு
கரைபுரண்ரடு ஓரும் நேரம் நெருங்குதே!
சேனைகளின் கர்த்தரின் பெலன் பெற்றிட
சேவை செய்வோர் விழித்து செயல்பட
ஆயத்தப்படுத்தும் ஆண்டவரின் பாதம் பற்றியே
ஆரவாரமில்லா அர்ப்பணிப்பு தேவை இன்றே
சொல்லக்கூடாத அசைவுகள் பூமியிலே
மெல்லக்கூடாத ஆபத்துகள் தெரியுதே
எச்சரிப்பின் சத்தத்தினை தேவ ஜனம் சொல்லாமல்
எக்காளத்தினையும் தொனிக்கச் செய்யாமல்
ஏனோ தானோ என்று வாழக்கூடாதே
ஏக்கம் நம்மை கவ்விப்பிடிக்கட்டுமே
அன்பரின் அறுவடைப் பணியில்
அன்பு சகோதரர் D. அகஸ்டின் ஜெபக்குமார்.
மேற்கோள் :
ஜெம்ஸ் சத்தம் - மாத இதழ் , டிசம்பர் 2020,பக்கம் : 12
0 கருத்துகள்
உங்களது மதிப்பு மிகுந்த கருத்துகளை இங்கு பதிவிடவும்